மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த `தசாவதாரம்' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் (ஜூன்) 6-ம் தேதி தசாவதாரம் வெளியிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சிறப்பம்சங்கள்:
- விஷ்ணுவின் 10 அவதாரங்களைக் குறிக்கும் விதமாக பத்து மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து, கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் `தசாவதாரம்'.
- இந்தப் படத்தை வேறுவேறு நாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் நடப்பது போன்ற கதையை எடுக்க வேண்டி வந்ததாலேயே படம் முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகி விட்டதாக ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
- இதுவரை இந்த அளவு பிரிண்டுகள் எந்தப் படத்திற்கும் போடப்பட்டதில்லையாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் ஆயிரம் பிரிண்டுகளுடன் தசாவதாரம் வெளியிடப்படுகிறது.
- அமெரிக்காவில் 60 மையங்களிலும், மலேசியாவில் 70 மையங்களிலும், சிங்கப்பூரில் 5, இலங்கையில் 25, துபாயில் 8, தென் ஆப்பிரிக்காவில் 4, கனடாவில் 18, லண்டனில் 25, ஆஸ்திரேலியாவில் 5, பிரான்சில் 2 மையங்களிலும் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படம் உலக அளவில் அதிக மையங்களில் திரைக்கு வருகிறது.
- தசாவதாரம் படத்தைப் பொறுத்தவரை மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று கூறிய ஆஸ்கார் ரவிச்சந்திரன், படத்தின் கதையைக் கேட்டதுமே தாம் தயாரிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும், கமலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இதுபோன்ற பங்களிப்பைத் தந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
- தசாவதாரம் வெளியான பிறகு, சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றை ஏற்படுத்தும் என்றும், இப்படம் ஒரு சினிமாவுக்கே ஒரு என்சைக்ளோபீடியாவாக அமையும் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெருமையுடன் கூறுகிறார்.
- தசாவதாரம் படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்த கமலுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.




2 comments:
My Dear Friend
A Good News from you
thank you
siva
puduvai.
@ சிவா
நன்றி நண்பா..
Post a Comment