Monday, June 9, 2008

உலகின் மிகக் கவர்ச்சியான பெண்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உலகின் மிகக் கவர்ச்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பிரிட்டனைச் சேர்ந்த ஆண்களுக்கான பிரபல மாத இதழ், இந்தியாவில் ஆன்-லைன் வாக்கெடுப்பு முறையில் உலகின் மிகக் கவர்ச்சியான பெண்ணைத் தேர்வு செய்யும் போட்டியை நடத்தியது. இதில், பாலிவுட் உலகின் தற்போதையை கனவுக் கன்னிகளில் ஒருவரும், சல்மான்கானின் காதலி என்று கூறப்படுபவருமான கத்ரீனா கைஃப் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, கரீனா கபூர், பிபாஷா பாசு ஆகியோரை மட்டுமல்லாமல், ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜூலி, ஸ்கார்லெட் ஜோன்ஸன், பாடகி ரிஹானா, மடோனா உள்ளிட்ட பல நடிகைகளை பின்னுக்குத் தள்ளி கத்ரீனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கவர்ச்சியான பெண்ணாக தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கத்ரீனா கூறுகையில், இந்தக் கருத்துக் கணிப்பில் வெற்றி பெற்றதற்கு ரசிகர்களின் ஆதரவே முக்கிய காரணம் என்றும், தனக்காக நேரம் செலவளித்து ஆன்லைனில் வாக்களித்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

1 comments:

அறிவன்#11802717200764379909 said...

அவர் ஏன் கவர்சிப் பெண்ணாய் தேர்ந்தெடுக்கப் பட்டார் என அறிய பதிவர் சாம்பார்வடை'யின் பதிவைப் பார்க்கவும்

Note: Please remove word verification in comment settings.