திரைப்பட நடிகை மஞ்சுளா விஜயகுமார் சென்னையில் தமது 59 ஆவது வயதில் இன்று ( 23-07-2013) காலமானார்.
தமிழ் திரையுலகில் 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா.
பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார். தொடர்ந்து அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்,
சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி. ராமாராவ் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து
அவர் திரைத்துரையில் வலம் வந்தார்.
1970 ஆம் ஆண்டுகளில் தமிழ் மட்டுமல்லாமால், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.
‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். நூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்த மஞ்சுளா கடைசியாக நடிச்த்த திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே'.

விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
கட்டிலில் இருந்து விழுந்து அடிபட்ட பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.