நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி திரைப்படங்களின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் V.ராமதாஸ் ஆகியோரின் மூன்றாவது திரைப்படம் ஹரிதாஸ். முந்தய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியினை தாராததை தொடர்ந்து இயக்குனர் குமரவேலன் புதிய பரிமாணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிதாஸ்.
காவல்துறையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸ் பத்து வயது வரை பாட்டியிடம் வளரும் தன் மகன் ஹரிதாஸைப்பற்றி பெரிதாக கவனம் எடுத்து
கொள்ளாவில்லை. பாட்டியின் மறைவிற்கு பிறகு தாயில்லா மகனை தனது முழு கவனிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
ஆடிசம் குறைபாட்டால் அவதிப்படும் மகனை வைத்துக்கொண்டு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன தந்தை சமுதாயத்தில் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான் கதையின் கரு. ஒருபக்கம் என்கவுன்டர் துரத்தல்கள், மறுபக்கம் தந்தைப்பாசம், கொஞ்சம் நகைச்சுவை போன்ற கலவையை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் குமரவேலன்.
இயல்பான நடிப்புக்கு பேர்பெற்ற நடிகர் கிஷோர் நாயகனாக அடியெடுத்து வைத்திருக்கும் முதல் திரைப்படம். கால்பந்தணியின் கோச், போலீஸ் ஆபீசர்
என்று இதுவரை திரையுலகில் வலம் வந்த நடிகர் கிஷோர் முதன்முறையாக குணச்சித்திர வேடத்தில் பிரம்மாண்ட நடிப்பு.
அரசு பள்ளி ஆசிரியாக நடிகை ஸ்னேகா திருமணத்திற்க்கு பின்பு இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படம். டூயட், காதல் போன்ற எந்த காட்சிகளும் இல்லாமல் ஆசிரியையாகவே திரைப்படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் ஸ்னேகா.
ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனாக வரும் மாஸ்டர் பிரித்விராஜ், அளவான நடிப்பை தனது முகபாவனைகளால் அசாதரணமாக
வெளிப்படுத்தியிருக்கிறார்.
டாக்டராக வரும் யூகிசேது ஆடிசம் குறைபாட்டை சுவாரஸியமாக சொல்லியிருப்பதும், விளையாட்டு பயிற்சி ஆசிரியராக வரும் ராஜ்கபூர் ஹரிதாஸுக்கு பயிற்சி தர முடியாது என்று காரணம் அடுக்குவதை யூகிசேது கதாபாத்திரம் மூலம் கவுண்டர் செய்வதும் மிக பிரம்மாண்டம்.
காட்சிக் கோர்வைகளை தனது ஒளிப்பதிவின் மூலம்சிறப்பாக வடிவமைத்து திரைப்படத்தின் உண்மையான நாயகனாய் வலம்வருகிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.
பஞ்சு டைலாக் “திருந்துரவன் ஒருமுறை தான் மன்னிப்பு கேப்பான். திரும்ப திரும்ப கேக்குறவன் திருந்தவே மாட்டான்”
காதல், தீவிரவாதம், அரசியல் ரெளடிகளின் அராஜகம், கிராமத்து பஞ்சாயத்து என்று அலுத்துபோயிருக்கும் தமிழ் திரையுலகில் ஹரிதாஸ் ஒரு புதிய பரிமாணம்.