கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு மாடர்ன் தியேடர்ஸ் தயாரிப்பில் வெளியான “உத்தம புத்திரன்” படதில் அறிமுகமாகி அதைதொடர்ந்து வெளியான “ கோகுல தாசி”, “ மதன காமராஜன்”, “குமாஸ்தாவின் பெண்” போன்றவற்றிலும் பிரபல நடிகர் P.U.சின்னப்பா அவர்களுடன் இணைந்து நடிதார் M.V.ராஜம்மா.
அடுத்ததாக நடிகர் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்த “ ஞான செளந்தரி”திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடந்ததை தொடர்ந்து " பாரிஜாதம்”, ”லைலா மஜனு” படங்களிலும் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்தார்.
பேறிஞர் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் உருவான “வேலைக்காரி” திரைப்படத்தில் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடிகை M.V. ராஜம்மா அவர்களின் நடிப்பு இன்றளவும் மறக்க முடியாது.
A. பீம் சிங் இயக்கத்தில் வெளியான “ பாகப்பிரிவினை” திரைப்படத்தில் மாற்றுத்திரனாளியாக நடித்த நடிகர் திலகம் சிவாஜியின் தாயாக நடித்து ரசிகர்களின் மனதை உருக வைத்தார்.
மக்கள் திலகம் MGR-வுடன் “ வேட்டைகாரன்” திரைப்படத்தில் இணைந்து நடிகை சாவித்திரியின் தாயாக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார் M.V. ராஜம்மா.
கர்ணன் திரைப்படத்தில் குந்திதேவி கதாபாத்திரத்தில் தோன்றி தனது உன்னதமான நடிப்பால் மக்களை கலங்க செய்தவர் நடிகை M.V.ராஜம்மா.
கலைஞரி மு.கருணாநிதி யின் வசனத்தில் வெளியான “ தாயில்லா பிள்ளை” திரைப்படத்தில் தாய்வேடம் ஏற்று அழகு தமிழ் வசனங்களை அற்புதமாக பேசி நேர்த்தியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இவ்வாறாக நடிகை M.V.ராஜம்மா அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Sooper....ennum endha madhiri pazham cinema stars'gla patthi neraya eludunga...i loved this
ReplyDeletei have seen vijay's vettaikaaran.. now gotta catch some of these movies
ReplyDelete