Friday, February 15, 2013

வனயுத்தம்

சர்சைகளில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வதில் ஏனோ இயக்குனர் ரமேஷுக்கு அலாதி பிரியம் போலும். ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய குப்பி, போலீஸ் குவார்ட்டர்ஸ் போன்ற திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் “வனயுத்தம்”.



சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது கூடுதல் பரபரப்பு!

வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய இத்திரைப்படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி முத்து லஷ்மி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் 25 லட்சம் ரூபாயினை நஷ்டஈடாக பெற்றுக்கொண்டு வழக்கினை திரும்ப பெற்றதினை தொடர்ந்து தமிழில் வனயுத்தமாகவும் கன்னடத்தில் அட்டகாஸா இத்திரைப்படம் இன்று வெளிவந்திருக்கிறது.

சமானியனான வீரப்பன் எப்படி யானை தந்தங்களை கடத்தினான்.. பின்னர் எப்படி சந்தன மரங்களை கடத்த தொட்ங்கினான்.. வனத்துறை அலுவலருக்கும் அவனுன்கும் உள்ள உறவு பின்னர் எப்படி பகையாய் மாறியது.. காவல்துறையிடம் பிடிபட்ட அவன் கூட்டாளிகள் சிறையில் படும் வேதனை, பணத்திற்காக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் பின்னர் பழ நெடுமாறன் - நக்கீரன் கோபால் அவரை எப்படி விடுத்தனர் பின்னர் தமிழக அரசின் சிறப்பு காவல் படையினரால் எப்படி கொல்லபட்டான் போன்ற விருவிருப்பான சம்பவங்களுடன் இத்திரைப்படன் வேகமாக செல்கிறது.



இத்திரைப்படத்தில் வீரப்பனாக கிஷோர் தனது இயல்பான நடிப்பில் அவர் காதாபாத்திரத்தினை சிறப்பித்திருக்கிறார்.



போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிகச்சிறப்பான தேர்வு.




சில மணித்துளிகளே வந்து செல்லும் லஷ்மிராய்..



”ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருக்கும் போது “ டேய்.. பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி கடத்தியிருக்கோமே? காசு கொடுப்பாங்களா?”  என்று கேட்பது தான் இத்திரைபடத்தின் ஒரே ஒரு காமடி காட்சி.

இசை: சந்தீப் செளதா - பின்னணி  இசை  அருமை. திரைப்படத்தில் பாடல்கள் ஏதும் இல்லை.

பரபரப்பு மற்றும் சர்சைகளுடைய திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர் ரமேஷ் அவர்களின் துணிச்சல் பாராட்டுதலுகுறியது.

No comments:

Post a Comment