Sunday, December 16, 2012

நீ தானே என் பொன்வசந்தம்



கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளிவந்திருக்கும் காதல் காவியம் “ நீ தானே என் பொன்வசந்தம்”

மின்னலே,வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின்  வெற்றியினை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனனின் காதல் திரைப்பட வரிசையில்  -நீதானே என் பொன்வசந்தம்.”. இசைஞானி இளையராஜாவின் இசை இத்திரைபடத்திற்கு மேலும் மெருகு சேர்த்திருக்கிறது.

வருண் - நித்யாவின் மழலை காதல் - விடலை காதல் - கல்லூரி காதல் - பருவ காதல் என ஒவ்வெரு கட்டத்திலும் சிறு சிறு பிரச்சனைகளால் பிரியும் காதலர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்னும் நான்கு வரிக் கதையினை வைத்து திரையரங்கில் நம்மை 153 நிமிஷங்கள் கட்டி போட்டிருக்கிறார் இயக்குனர் கெளத்தம் வாசுதேவ் மேனன்.

படம் சில  வருடங்களுக்கு முன் நடப்பதை உணர்த்தும் விதமாக பணக்கார  நாயகி அந்த காலகட்டத்தில் பிரபலமான நோக்கியா 3110 செல்ஃபோனை உபயோகப்படுத்துவதாக காட்டுவது இயக்குனரின் லாஜிக் சென்சிற்கு ஒரு எடுத்துக்காட்டு.



 நாயகன் - ஜீவா  கோ படத்தல யூத்-ஆ இருந்தவர் அதைவிட இளமையா சில காட்சிகளில் தெரிஞ்சாலும் மிகவும் சிறப்பான நடிப்பு மற்றும்  இளமையான தோற்றத்தின் மூலமாக அனைவரின் மனம் கவர்ந்திருகிறார்.


நாயகி சமந்தாவின் நடிப்பை பாராட்டலாம். பாடசாலை சிறுமி தொடக்கம் கல்லூரி மாணவி வரை தனது நடிப்பாலும் அழகாலும் கலக்கியே உள்ளார். 


 படத்தின் சிறப்பம்சங்கள்:

 நாயகன் ஜீவா-வின் அண்ணன் தான் விரும்பிய பெண்ணின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்று பெண் கேட்டு அவமானப்பட்டு வீடு திரும்பியவுடன் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுவதும் - .ஜீவாவின் திருமணத்துக்கு முன்னதான அந்த இரவு சந்திப்பும், பழைய நினைவுகள் மீட்டல்களும் மனதை நெகிழச் செய்கிறது.



சந்தானம் - வித்யுலேகா ராமன் ( ஜெனி) - காதல் - படத்தின் பெரிய பலம். மற்றும் சந்தானம் பேசும் ஆங்கிலம் கொஞ்சம் ஹார்டாக இருந்தாலும் முதல் பாதி முழுவதும் நம்மை கலகலப்பாக கொண்டு போக உதவுகிறார். 

ஓம்பிரகாஷ், எம்.எஸ்.பிரபு, எஸ்.ஆர்.கதிர் ஆகியோரின் ஒளிப்பதிவு இக்கதைக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. தேவையான இடங்களில் பிரமிப்பையும், சில இடங்களில் ரசனையோடு ஈர்க்கவும் வைக்கின்றன.


இளையராஜாவின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும்,  இப்படத்தில் புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் இசைஞானி என்பதை நிருபித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் காதலர்களுக்கிடையே வரும் சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். படத்தை பார்க்கும் பொழுது அட நானும் இப்படித்தானே காதலித்தோம் என நினைக்க வைக்கும் முறையில் தனது கதையினை நகர்த்தி சென்றுள்ளார்.

க்ளைமேக்ஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா போலவே நெகடீவ் என பதட்டப்பட வைத்து சுபமாக முடிப்பது இயக்குனரின் சிறப்பம்சம்.

3 comments:

  1. படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் அது மிகப்பெரிய பதிவாக போகும் இதில் பின்னூட்டம் என்பதால் மிகச் சுருக்கமாக சொல்கிறேன்... தாங்கள் அனுபவித்து பார்த்திருப்பது எனக்கு புரிகிறது, ஆனாலும் இந்த படத்த அனுபவிச்சு பாத்ததேல்லாம் ரொம்ப ஓவருங்க... நீங்க படம் முடியுற வரைக்கும் ஒக்காருந்ததுக்கே அவார்ட் குடுக்கலாம்...

    #அது வருது ஒடுங்கககககக

    ReplyDelete