Friday, March 29, 2013

ஒன்பது குழி சம்பத் - இணையதள வெளியீட்டு விழா





காலச்சக்கரத்தின் சுழற்ச்சி வேகத்தில் இணையதளம் இன்றியமையாததாகிவிட்ட இன்னாளில், திரைத்துறையும் விதிவிலக்கல்ல என்று கூறுவதைவிட திரைப்படத்திற்கு பலன் அதிகம் என்று கூறுதலே சரி. இன்று ஒரு திரைப்படத்தின் வருகை அதன் இணையதளத்தின் மூலமாக காணிக்கபடுகிறது  அதன் தரமே அதன் எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. பொதுவாக அவ்விணையதளங்களை இசைவெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாகவே வெளியிடுவர்.

ஆனால் தென் இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் பிரத்தியேக இணையதள வெளியீட்டு விழா என்ற வரலாற்றினை படைத்து, தமிழ்த்திரையுலகிற்கு மேலும் ஒரு மணிமகுடமாய்  80-20 மூவீஸ் கார்ப் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படம் ஒன்பது குழி சம்பத்.

கடந்த 18ஆம் தேதி அன்று ( March 18,2013) வடபழனி கமலா திரையரங்கில் இயக்குனர் திரு.பாலு மகேந்திரா அவர்கள் துவக்கி வைக்க இணைய தளத்தினை வெண் திரையில் அனைவரும் கண்டுகளித்தனர். இதுபோன்று ஒரு இணையதளத்தினை வெண் திரையில் காணச்செய்வதும் இதுவே முதல்முறையாகும்.





இவ்விணையதளம் நாம் திரைப்படங்களில் பார்பது போன்றே தணிக்கை சான்றிதழுடன் தொடங்கி இந்த படம் உருவான விதத்தை மையமாக்கி அதனை பறைசாற்றும் விதமாக அமைகிறது. அதுவும் ஒரு திரைப்படம் எப்படி தொடங்கி முடியுமோ அதனைப்போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது அன்பது கூடுதல் சிறப்பு.



 இக்குழுவினர் இணையதளத்துடன் நின்றிவிடாமல் முகநூல் [Facebook] மற்றும் ட்விட்டர்[Twitter] மூலமாக ரசிகர்களுடன் ஒன்று கலந்துள்ளனர்.

நன்றியுரை என்பது எப்போது விழாவின் இறுதியில் இடம்பெருவது வழக்கம். ஆனால் இவ்விழாவில் ஒன்பது குழி சம்பத் திரைப்பட நாயகன் பாலாவின் நன்றியுரையுடன் தொடங்கியது பின்நவீனத்துவ குறியீடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறாக அனைத்திலும் தனிதன்மை படைக்கும் இத்திரைப்படம் வெண் திரையிலும் பல சாதனைகளை படைக்கும் என்னும் எதிர்பார்புகளோடு கமலா திரையரங்கிலிருந்து விடைபெற்றோம்.

Wednesday, March 27, 2013

இரங்கல்: நடிகை சுகுமாரி




பத்து வயதில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் “ஓர் இரவு” திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை சுகுமாரி ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில்  எம்.ஜி.ர், சிவாஜி, ஜெமினி கணேசன்  போன்ற மறைந்த நடிகர்களோடு மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களான பிரஷாந்த், அஜீத், மாதவன், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோருடனும் பொன்னர் சங்கர் பூவெல் லாம் உன் வாசம், அலைபாயுதே, வேட்டைக்காரன், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாது ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

"நம்ம கிராமம்' படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற  நடிகை சுகுமாரி தனது 74 வயதில் சிறுநீரகக் கோளாறால் ( 26 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.

Tuesday, March 19, 2013

60-வது தேசிய திரைப்பட விருதுகள்



இந்திய அரசினால்1954 ஆம் ஆண்டு தொடங்கிய இத் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக  தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது. இவிருது இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் முதன்மையானதுமாகும்.

2012 -ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 60-வது தேசிய திரைப்பட விருதுகள்  இந்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன..அவற்றில் 5 விருதுகளை தமிழ் திரையுலகம் பெற்றிருக்கிறது. 



சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை என். சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்திலும் வெளியான வழக்கு எண்: 18/9 திரைப்படம் பெறுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் சிறந்த ஒப்பனை கலைஞர் விருதினை ராஜா அவர்கள் பொறுகிறார்.



சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை பரதேசி திரைப்படத்திற்காக பூர்ணிமா ராமசாமி அவர்கள் பொறுகிறார்.



மிகுந்த சர்ச்சைகளுக்குபின் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிர்காக பூண்டவீ தோர் தவிபாஸாஸ் மற்றும் லால்குடி இளையராஜா ஆகியோர் பொறுகின்றனர்.

Wednesday, March 6, 2013

இரங்கல்: நடிகை ராஜசுலோசனா



1953-ல் வெளியான ”குணசாகரி” என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜசுலோசனா அதன்பின்னர் வெளியான ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின்மூலம் புகழேனியின் உச்சிக்கே சென்றார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என திரையுலக சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா.

ராஜசுலோசனா நடிப்பு மட்டுமில்லாமல்  தன் இனிய குரலினாலும் கைதி கண்ணாயிரம் படத்தில் ”கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்” -பாடலிலும்,


நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய ”குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா”…
என்ற பாடலும்அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.

 நாயகியாய் மட்டுமின்றி  குணச்சித்திர வேடங்களில் எம்ஜிஆரின் இதயக்கனி ரஜினியின் காயத்ரி- ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

 நடிப்பு, பாடல் மட்டுமின்றி குச்சுப்புடி நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு-கன்னடம்-இந்தி என நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற ராஜசுலோசனா தனது 77 வயதில் சில நாட்களாய் நோய்வாய் பட்டிருந்து ( 6 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.