Friday, March 29, 2013

ஒன்பது குழி சம்பத் - இணையதள வெளியீட்டு விழா





காலச்சக்கரத்தின் சுழற்ச்சி வேகத்தில் இணையதளம் இன்றியமையாததாகிவிட்ட இன்னாளில், திரைத்துறையும் விதிவிலக்கல்ல என்று கூறுவதைவிட திரைப்படத்திற்கு பலன் அதிகம் என்று கூறுதலே சரி. இன்று ஒரு திரைப்படத்தின் வருகை அதன் இணையதளத்தின் மூலமாக காணிக்கபடுகிறது  அதன் தரமே அதன் எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. பொதுவாக அவ்விணையதளங்களை இசைவெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாகவே வெளியிடுவர்.

ஆனால் தென் இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் பிரத்தியேக இணையதள வெளியீட்டு விழா என்ற வரலாற்றினை படைத்து, தமிழ்த்திரையுலகிற்கு மேலும் ஒரு மணிமகுடமாய்  80-20 மூவீஸ் கார்ப் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படம் ஒன்பது குழி சம்பத்.

கடந்த 18ஆம் தேதி அன்று ( March 18,2013) வடபழனி கமலா திரையரங்கில் இயக்குனர் திரு.பாலு மகேந்திரா அவர்கள் துவக்கி வைக்க இணைய தளத்தினை வெண் திரையில் அனைவரும் கண்டுகளித்தனர். இதுபோன்று ஒரு இணையதளத்தினை வெண் திரையில் காணச்செய்வதும் இதுவே முதல்முறையாகும்.





இவ்விணையதளம் நாம் திரைப்படங்களில் பார்பது போன்றே தணிக்கை சான்றிதழுடன் தொடங்கி இந்த படம் உருவான விதத்தை மையமாக்கி அதனை பறைசாற்றும் விதமாக அமைகிறது. அதுவும் ஒரு திரைப்படம் எப்படி தொடங்கி முடியுமோ அதனைப்போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது அன்பது கூடுதல் சிறப்பு.



 இக்குழுவினர் இணையதளத்துடன் நின்றிவிடாமல் முகநூல் [Facebook] மற்றும் ட்விட்டர்[Twitter] மூலமாக ரசிகர்களுடன் ஒன்று கலந்துள்ளனர்.

நன்றியுரை என்பது எப்போது விழாவின் இறுதியில் இடம்பெருவது வழக்கம். ஆனால் இவ்விழாவில் ஒன்பது குழி சம்பத் திரைப்பட நாயகன் பாலாவின் நன்றியுரையுடன் தொடங்கியது பின்நவீனத்துவ குறியீடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறாக அனைத்திலும் தனிதன்மை படைக்கும் இத்திரைப்படம் வெண் திரையிலும் பல சாதனைகளை படைக்கும் என்னும் எதிர்பார்புகளோடு கமலா திரையரங்கிலிருந்து விடைபெற்றோம்.

No comments:

Post a Comment