மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இணையதள வலைப்பக்கத்தை மாண்புமிகு நிதியமைச்சர் திரு.க. அன்பழகன், மாண்புமிகு மின்துறை அமைச்சர் ஆர்க்காடு திரு.நா.வீராசாமி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் முன்னிலையில் இன்று (9.12.2009) தொடங்கிவைத்தார்கள்.
வளர்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகிற்கேற்பத் தமிழ்ச் செம்மொழி வளம்பெறும் வகையிலும் தற்கால வாழ்க்கை முறைக்குத் தமிழ்ச்செம்மொழி இலக்கியங்கள் காட்டும் விழுமியங்களை வெளிப்படுத்தும்வகையிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்
ஆய்வரங்கம் அமையவுள்ளது.
வலைத்தளப் பக்கம்
தமிழர்களின் மரபு வழிப்பட்ட நாதசுரத்தில் மல்லாரி இசையுடன் வலைப் பக்கம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் இலச்சினையும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையும் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வலைத்தளப்பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் சங்ககால நாணய முத்திரையும் வலதுபக்கம் சிலம்பும், தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களும், சியதுவெளிக்குறியீடுகளும், முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன.
அறிவிப்புகள்
இப்பக்கத்தில், மாநாடு தொடர்பான அறிவிப்புகளை அறியலாம்.
கோவை 2010
இப்பக்கத்தில், கோவை மாநகர் பற்றிய செய்திகளோடு சங்ககால வரலாற்றில் கொங்கு மண்டலம் பெற்றிருயத சிறப்புகளை அறியலாம்.
தமிழ்ச்செம்மொழி
இப்பக்கத்தில், உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் பெற்றிருக்கும் தகுதிகளுக்கேற்ப அறியதேற்புப் பெற பரிதிமாற் கலைஞர் முதலாகத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் பணிகளும் இடம்பெறுவதோடு இயதிய அரசின் ஏற்பினைப் பெற்றுத் தயத முதல்வர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகளும் இடம் பெறுகின்றன.
ஆய்வரங்கப் பொருண்மைகள்
இப்பக்கத்தில், நடைபெறவுள்ள மாநாட்டு ஆய்வரங்கத்தில் இடம்பெறக் கூடிய பொதுநிலைச் சிறப்பரங்கம், தனிப்பொழிவரங்கம்,. கலயதுரை யரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளின் பொருண்மை விவரங்களும் தரப்பட்டுள்ளன.
பங்கேற்க:
இப்பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கத்தில் கட்டுரையாளராக,நோக்காளராகப் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளும் வகையில் படிவங்களும் கட்டுரையாளர் அனுப்ப வேண்டிய ஆய்வுச் சுருக்கத்திற்கான பகுதியும் இடம் பெற்றுள்ளன. வலைத்தளப் பக்கத்திலிருயதே பதிவு செய்து கொள்ளும் வகையிலும் தொடர்பு கொள்ளும் வகையிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுச் சொல் வழங்கப்படும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில்
இப்பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக அவ்வப்போது வெளிவரும் ஊடகப் பதிவுகள் இடம்பெறும்.
இணைப்புத் தளங்கள்
தொடர்புடைய தமிழ் இணையப் பக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மனஉரை:
மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக மனப்பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் மனஉரைப்பகுதி இடம் பெற்றுள்ளது.
Thursday, December 10, 2009
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
Posted by Jothivel Moorthi.AC at 12:36 AM 0 comments
Labels: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
Tuesday, December 8, 2009
கூவம்....
1967-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபோதே, கூவத்தில் படகுவிடும் திட்டத்தைத் தொடங்கினார் அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு. கருணாநிதி. அதற்காகக் கட்டப்பட்ட படகுத்துறைகளின் சிதைந்த மிச்சங்களை இப்போதும் சில இடங்களில் காண முடிகிறது. அப்போது அவரால் அத்திட்டத்தை செய்துமுடிக்க முடியவில்லை. "மகன் தந்தைக்காற்றும் உதவி' அவர் தொடங்கிய பணியை நிறைவு செய்வதுதான்.
கூவம் மிகமிக மோசமாக மாசடைந்து, கழிவுகள் நகரவும் முடியாதபடி தேங்கிக் கிடக்கிறது. கூவத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, தெளியவைத்து, வடிகட்டிய நீரில் மீன்களை விட்டால், 4 மணி நேரத்தில் மீன்கள் செத்துவிடுகின்றன என்பதுதான் கூவம் குறித்து ஆய்வுமுடிவுகள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்ஸிஜன் இல்லை. வெறும் நச்சு உலோகக் கலப்பும், சேறும் சகதியும்தான் உள்ளன. அடையாறும் அந்தவிதமாகவே படுமோசமாக மாசடைந்து கிடக்கிறது. மணப்பாக்கம் தடுப்பணை வரை அடையாறு கொஞ்சம் தூய்மையாக இருந்தாலும், சென்னை பெருநகரத்தில் நுழைந்தவுடன் அதன் மேனியில் வெறும் குப்பைகளும் நச்சுக் கழிவுகளும்தான் கொட்டப்படுகின்றன. "அடையாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே நம்ப முடியாத விஷயமாக ஆகிவிட்டது.
Posted by Jothivel Moorthi.AC at 12:16 PM 0 comments
Labels: செய்திகள்
Thursday, December 3, 2009
வேதாரண்யம் அருகே பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகளும், 1 ஆசிரியையும் பலியாகினர்.
கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் இன்று காலை நாகக்குடையான் பகுதியிலிருந்து 21 குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது கத்திரிபுலம் பண்ணையடி குத்தகை என்ற இடத்தருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி அருகிலிருந்த குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் இருந்த 9 குழந்தைகள் மற்றும் 1 ஆசிரியை பலியானார்கள். 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஓட்டுனர் விபத்தின்போது செல்போனில் பேசியவாரே வண்டி ஓட்டியதின் விளைவாகவே இவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது. இவ்வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் தப்பியோடிவிட்டனர்.
குளத்தில் மூழ்கிய குழந்தைகளை மீட்க.. குளத்திலிருந்த தண்ணீர் அனைத்தையும் இறைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Posted by Jothivel Moorthi.AC at 7:20 PM 0 comments
Labels: விபத்து
போபால் விஷவாயு கசிவு - 25ஆம் ஆண்டு...
1984 டிசம்பர் 2 ம் தேதி இரவு 10 மணி.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கிறது. அந்த டேங்க்கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோசயனைட், இந்தத் தண்ணீர் பட்டதும் வேதியியல் மாற்றம் அடைகிறது. 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்கிறது. அழுத்தம் தாங்காமல் கொள்கலனின் பாதுகாப்பு மூடிகள் திறந்து கொள்கின்றன. நள்ளிரவில் விஷவாயு வெளியேறிப் பரவுகிறது...போபால் நகர் முழுவதும்!
அப்போது அந்நகரின் மக்கள் தொகை 5.2 லட்சம். இவர்களில் 2 லட்சம் பேர் சிறுவர்கள். 3000 பேர் கருவுற்ற தாய்மார்கள்.
டிசம்பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்கள் அனைவரும் கண்ணெரிச்சல், மூச்சடைப்புடன் கண்விழிக்கின்றனர். அன்றைய ஒரு நாளில் மட்டும் சுமார் 4000 பேர் இறந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உண்மையில், இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் இறந்தவர்கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்பால் மெல்லச் செத்தவர்கள் 25,000 பேர்.
இன்னமும் சாகாமல் இருக்கும் இரண்டு விஷயங்களில் முதலாவது, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்றுதான். இரண்டாவதாக, யூனியன் கார்பைடு விட்டுச்சென்ற 390 டன் நச்சு வேதிப்பொருள்கள் இன்னமும் போபாலின் நிலத்தடி நீரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
Posted by Jothivel Moorthi.AC at 10:27 AM 1 comments
Labels: நிகழ்வுகள்






