Tuesday, July 23, 2013

இரங்கல்: நடிகை மஞ்சுளா விஜயகுமார்



திரைப்பட நடிகை மஞ்சுளா விஜயகுமார் சென்னையில் தமது 59 ஆவது வயதில் இன்று ( 23-07-2013) காலமானார்.

தமிழ் திரையுலகில் 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார். தொடர்ந்து அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி. ராமாராவ் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து அவர் திரைத்துரையில் வலம் வந்தார்.

1970 ஆம் ஆண்டுகளில் தமிழ் மட்டுமல்லாமால், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். நூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்த மஞ்சுளா கடைசியாக நடிச்த்த திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே'.

விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

கட்டிலில் இருந்து விழுந்து அடிபட்ட பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Thursday, July 18, 2013

இரங்கல்: பாடலாசிரியர் வாலி



பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று  ( 18-07-2013) தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனந்த விகடனில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்துடன் உலா வந்த இவர், சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். ‘ஹேராம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 

Tuesday, June 18, 2013

கரிமேடு




"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் ஸ்ரீனிவாச ராஜு இயக்கத்தில் "கரிமேடு"  என வெளிவந்திருக்கிறது.

காஞ்சிபுரம் சாலையில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு கும்பல் கழுத்தறுத்து கொல்கிறது. அக்கும்பலில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அவர்கள் மதுரைக்கு தப்பி ஓடி பதுங்குகின்றனர்.அங்கும் இவர்கள் கொலை வெறி வேட்டை தொடர்கிறது.இவர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி துணிச்சலாக விசாரணையில் இறங்குகிறார். கொலையாளிகளை அவர் எப்படி பிடிக்கிறார் என்பது மீதி கதை...






கொலை கும்பலில் வேவு பார்க்கும் பெண்ணாக வரும் பூஜாகாந்தி மிரட்டியுள்ளார். ரோட்டோரம் உட்கார்ந்து பீடியை புகைத்தபடி வீடுகளை நோட்டம் விடுவது, வீட்டுக்குள் புகுந்து கொலை, கொள்ளை என கூட்டாளிகளுடன் ஈடுபடுவதை உணர்ச்சியின்றி பீடி குடித்தபடி பார்த்துக் கொண்டு இருப்பது அவருடைய அலட்சியமான நடையும், கலைந்த தலையும், குலைந்த புடவையும், எதற்கும் கவலைப்படாமல் குத்துக்காலிட்டு உட்காரும் பாவமும் ரணகளம்!



 பின்னர் காவல் நிலையத்தில் அடிவாங்குவது....


கொலை கும்பல் தலைவனாக வரும் மகரந்த் பாண்டே குரூரம்.... ஆட்களை கழுத்தை அறுத்து பீறிடும் ரத்தம் பார்த்து கோரமாக சிரிப்பது உதறல்.

ரகுமுகர்ஜி - பிரியங்கா ஜோடியின் திருமணமும் அவர்கள் சோக முடிவும் பதற வைக்கும் கிளை கதை.

அர்ஜூன் ஜன்யாவின் இசை, ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்டங்களுடன் மதுரை கரிமேடாக தெரியும் படத்தின் வசனக்காட்சிகள்,
திடீர் திடீர் என கன்னட தண்டுபாளையாவாக மாறுவது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், "கரிமேடு" மிகவும் கரடு முரடு!"

Saturday, June 15, 2013

இரங்கல்: இயக்குனர் மணிவண்ணன்



பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். திரையுலகின் மீதுள்ள ஆர்வத்தால் இத்துறையில்
அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு
கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண்,
தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற  படத்தை இயக்கினார்.

கோவை மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜுடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில்  மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது.


இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் அவர்கள் இன்று (15-06-2013) திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.

Saturday, May 25, 2013

இரங்கல்: பாடகர் டி.எம்.செளந்தரராஜன்



பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.

மதுரையில், 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். 1950ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி பாடல் மூலமாக சௌந்தரராஜன் தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.


தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். இது தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் பாடல்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பிய டி.எம்.சௌந்தரராஜன் இன்று(25-05-2013) மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

Wednesday, April 17, 2013

இரங்கல்: இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி





1950-ல் தொடங்கி 1956வரை மெல்லிசை மன்னர்கள், (விஸ்வநாதன் - ராமமூர்த்தி)  இரட்டையர்கள் என்று தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட பல ஆண்டுக்காலமாக முத்திரை பதித்தவர்ள் ஆவர்.இவர்கள் இறுவரும் இணைந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

.எம்.எஸ்.விஸ்வநாதனைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வயலின் மேதையான டி.கே.ராமமூர்த்தி தனது 91-வயதில் சிறிது காலம் நோய்வாய்பட்டு இயற்கை ஏய்தினார்.

Sunday, April 14, 2013

இரங்கல்: பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ்


 
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பிறந்து முறையாக கர்நாடக சங்கீதம் பயின்று  துறைக்கு தனது 22ஆம் வயதில் தமிழ்த் திரையுலகில் யார் யார் யாரவர் யாரோ என்ற பாடலின் மூலம் அடியெடுத்து வைத்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

தமிழ்மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார். சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்,  முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.

தனது தேனிசை குரலால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் தமது 82ஆம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

Friday, March 29, 2013

ஒன்பது குழி சம்பத் - இணையதள வெளியீட்டு விழா





காலச்சக்கரத்தின் சுழற்ச்சி வேகத்தில் இணையதளம் இன்றியமையாததாகிவிட்ட இன்னாளில், திரைத்துறையும் விதிவிலக்கல்ல என்று கூறுவதைவிட திரைப்படத்திற்கு பலன் அதிகம் என்று கூறுதலே சரி. இன்று ஒரு திரைப்படத்தின் வருகை அதன் இணையதளத்தின் மூலமாக காணிக்கபடுகிறது  அதன் தரமே அதன் எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. பொதுவாக அவ்விணையதளங்களை இசைவெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாகவே வெளியிடுவர்.

ஆனால் தென் இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் பிரத்தியேக இணையதள வெளியீட்டு விழா என்ற வரலாற்றினை படைத்து, தமிழ்த்திரையுலகிற்கு மேலும் ஒரு மணிமகுடமாய்  80-20 மூவீஸ் கார்ப் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படம் ஒன்பது குழி சம்பத்.

கடந்த 18ஆம் தேதி அன்று ( March 18,2013) வடபழனி கமலா திரையரங்கில் இயக்குனர் திரு.பாலு மகேந்திரா அவர்கள் துவக்கி வைக்க இணைய தளத்தினை வெண் திரையில் அனைவரும் கண்டுகளித்தனர். இதுபோன்று ஒரு இணையதளத்தினை வெண் திரையில் காணச்செய்வதும் இதுவே முதல்முறையாகும்.





இவ்விணையதளம் நாம் திரைப்படங்களில் பார்பது போன்றே தணிக்கை சான்றிதழுடன் தொடங்கி இந்த படம் உருவான விதத்தை மையமாக்கி அதனை பறைசாற்றும் விதமாக அமைகிறது. அதுவும் ஒரு திரைப்படம் எப்படி தொடங்கி முடியுமோ அதனைப்போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது அன்பது கூடுதல் சிறப்பு.



 இக்குழுவினர் இணையதளத்துடன் நின்றிவிடாமல் முகநூல் [Facebook] மற்றும் ட்விட்டர்[Twitter] மூலமாக ரசிகர்களுடன் ஒன்று கலந்துள்ளனர்.

நன்றியுரை என்பது எப்போது விழாவின் இறுதியில் இடம்பெருவது வழக்கம். ஆனால் இவ்விழாவில் ஒன்பது குழி சம்பத் திரைப்பட நாயகன் பாலாவின் நன்றியுரையுடன் தொடங்கியது பின்நவீனத்துவ குறியீடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறாக அனைத்திலும் தனிதன்மை படைக்கும் இத்திரைப்படம் வெண் திரையிலும் பல சாதனைகளை படைக்கும் என்னும் எதிர்பார்புகளோடு கமலா திரையரங்கிலிருந்து விடைபெற்றோம்.

Wednesday, March 27, 2013

இரங்கல்: நடிகை சுகுமாரி




பத்து வயதில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் “ஓர் இரவு” திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை சுகுமாரி ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில்  எம்.ஜி.ர், சிவாஜி, ஜெமினி கணேசன்  போன்ற மறைந்த நடிகர்களோடு மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களான பிரஷாந்த், அஜீத், மாதவன், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோருடனும் பொன்னர் சங்கர் பூவெல் லாம் உன் வாசம், அலைபாயுதே, வேட்டைக்காரன், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாது ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

"நம்ம கிராமம்' படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற  நடிகை சுகுமாரி தனது 74 வயதில் சிறுநீரகக் கோளாறால் ( 26 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.

Tuesday, March 19, 2013

60-வது தேசிய திரைப்பட விருதுகள்



இந்திய அரசினால்1954 ஆம் ஆண்டு தொடங்கிய இத் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக  தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது. இவிருது இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் முதன்மையானதுமாகும்.

2012 -ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 60-வது தேசிய திரைப்பட விருதுகள்  இந்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன..அவற்றில் 5 விருதுகளை தமிழ் திரையுலகம் பெற்றிருக்கிறது. 



சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை என். சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்திலும் வெளியான வழக்கு எண்: 18/9 திரைப்படம் பெறுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் சிறந்த ஒப்பனை கலைஞர் விருதினை ராஜா அவர்கள் பொறுகிறார்.



சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை பரதேசி திரைப்படத்திற்காக பூர்ணிமா ராமசாமி அவர்கள் பொறுகிறார்.



மிகுந்த சர்ச்சைகளுக்குபின் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிர்காக பூண்டவீ தோர் தவிபாஸாஸ் மற்றும் லால்குடி இளையராஜா ஆகியோர் பொறுகின்றனர்.

Wednesday, March 6, 2013

இரங்கல்: நடிகை ராஜசுலோசனா



1953-ல் வெளியான ”குணசாகரி” என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜசுலோசனா அதன்பின்னர் வெளியான ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின்மூலம் புகழேனியின் உச்சிக்கே சென்றார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என திரையுலக சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா.

ராஜசுலோசனா நடிப்பு மட்டுமில்லாமல்  தன் இனிய குரலினாலும் கைதி கண்ணாயிரம் படத்தில் ”கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்” -பாடலிலும்,


நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய ”குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா”…
என்ற பாடலும்அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.

 நாயகியாய் மட்டுமின்றி  குணச்சித்திர வேடங்களில் எம்ஜிஆரின் இதயக்கனி ரஜினியின் காயத்ரி- ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

 நடிப்பு, பாடல் மட்டுமின்றி குச்சுப்புடி நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு-கன்னடம்-இந்தி என நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற ராஜசுலோசனா தனது 77 வயதில் சில நாட்களாய் நோய்வாய் பட்டிருந்து ( 6 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.

Wednesday, February 27, 2013

ஹரிதாஸ்

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி திரைப்படங்களின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் V.ராமதாஸ் ஆகியோரின் மூன்றாவது திரைப்படம் ஹரிதாஸ். முந்தய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியினை தாராததை தொடர்ந்து இயக்குனர் குமரவேலன் புதிய பரிமாணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிதாஸ்.




காவல்துறையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸ்  பத்து வயது வரை பாட்டியிடம் வளரும் தன் மகன் ஹரிதாஸைப்பற்றி பெரிதாக கவனம் எடுத்து
கொள்ளாவில்லை. பாட்டியின் மறைவிற்கு பிறகு தாயில்லா மகனை தனது முழு கவனிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

ஆடிசம் குறைபாட்டால் அவதிப்படும் மகனை வைத்துக்கொண்டு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்  ஆன தந்தை  சமுதாயத்தில் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான் கதையின் கரு. ஒருபக்கம் என்கவுன்டர் துரத்தல்கள், மறுபக்கம் தந்தைப்பாசம், கொஞ்சம் நகைச்சுவை போன்ற கலவையை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் குமரவேலன். 

  

இயல்பான நடிப்புக்கு பேர்பெற்ற நடிகர் கிஷோர் நாயகனாக அடியெடுத்து வைத்திருக்கும் முதல் திரைப்படம். கால்பந்தணியின் கோச், போலீஸ் ஆபீசர்
என்று இதுவரை திரையுலகில் வலம் வந்த நடிகர் கிஷோர் முதன்முறையாக குணச்சித்திர வேடத்தில் பிரம்மாண்ட  நடிப்பு.



அரசு பள்ளி ஆசிரியாக நடிகை ஸ்னேகா திருமணத்திற்க்கு பின்பு இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படம். டூயட், காதல் போன்ற எந்த காட்சிகளும் இல்லாமல் ஆசிரியையாகவே திரைப்படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் ஸ்னேகா.


ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனாக வரும் மாஸ்டர் பிரித்விராஜ், அளவான நடிப்பை தனது முகபாவனைகளால் அசாதரணமாக
வெளிப்படுத்தியிருக்கிறார்.

டாக்டராக வரும் யூகிசேது ஆடிசம் குறைபாட்டை சுவாரஸியமாக சொல்லியிருப்பதும், விளையாட்டு பயிற்சி ஆசிரியராக வரும் ராஜ்கபூர் ஹரிதாஸுக்கு பயிற்சி தர முடியாது என்று காரணம் அடுக்குவதை யூகிசேது கதாபாத்திரம் மூலம் கவுண்டர் செய்வதும் மிக பிரம்மாண்டம்.

காட்சிக் கோர்வைகளை தனது  ஒளிப்பதிவின் மூலம்சிறப்பாக வடிவமைத்து திரைப்படத்தின் உண்மையான நாயகனாய் வலம்வருகிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.

பஞ்சு டைலாக் “திருந்துரவன் ஒருமுறை தான் மன்னிப்பு கேப்பான். திரும்ப திரும்ப கேக்குறவன் திருந்தவே மாட்டான்

காதல், தீவிரவாதம், அரசியல் ரெளடிகளின் அராஜகம், கிராமத்து பஞ்சாயத்து என்று அலுத்துபோயிருக்கும் தமிழ் திரையுலகில் ஹரிதாஸ் ஒரு புதிய பரிமாணம்.

Friday, February 15, 2013

வனயுத்தம்

சர்சைகளில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வதில் ஏனோ இயக்குனர் ரமேஷுக்கு அலாதி பிரியம் போலும். ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய குப்பி, போலீஸ் குவார்ட்டர்ஸ் போன்ற திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் “வனயுத்தம்”.



சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது கூடுதல் பரபரப்பு!

வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய இத்திரைப்படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி முத்து லஷ்மி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் 25 லட்சம் ரூபாயினை நஷ்டஈடாக பெற்றுக்கொண்டு வழக்கினை திரும்ப பெற்றதினை தொடர்ந்து தமிழில் வனயுத்தமாகவும் கன்னடத்தில் அட்டகாஸா இத்திரைப்படம் இன்று வெளிவந்திருக்கிறது.

சமானியனான வீரப்பன் எப்படி யானை தந்தங்களை கடத்தினான்.. பின்னர் எப்படி சந்தன மரங்களை கடத்த தொட்ங்கினான்.. வனத்துறை அலுவலருக்கும் அவனுன்கும் உள்ள உறவு பின்னர் எப்படி பகையாய் மாறியது.. காவல்துறையிடம் பிடிபட்ட அவன் கூட்டாளிகள் சிறையில் படும் வேதனை, பணத்திற்காக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் பின்னர் பழ நெடுமாறன் - நக்கீரன் கோபால் அவரை எப்படி விடுத்தனர் பின்னர் தமிழக அரசின் சிறப்பு காவல் படையினரால் எப்படி கொல்லபட்டான் போன்ற விருவிருப்பான சம்பவங்களுடன் இத்திரைப்படன் வேகமாக செல்கிறது.



இத்திரைப்படத்தில் வீரப்பனாக கிஷோர் தனது இயல்பான நடிப்பில் அவர் காதாபாத்திரத்தினை சிறப்பித்திருக்கிறார்.



போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிகச்சிறப்பான தேர்வு.




சில மணித்துளிகளே வந்து செல்லும் லஷ்மிராய்..



”ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருக்கும் போது “ டேய்.. பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி கடத்தியிருக்கோமே? காசு கொடுப்பாங்களா?”  என்று கேட்பது தான் இத்திரைபடத்தின் ஒரே ஒரு காமடி காட்சி.

இசை: சந்தீப் செளதா - பின்னணி  இசை  அருமை. திரைப்படத்தில் பாடல்கள் ஏதும் இல்லை.

பரபரப்பு மற்றும் சர்சைகளுடைய திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர் ரமேஷ் அவர்களின் துணிச்சல் பாராட்டுதலுகுறியது.

Wednesday, February 13, 2013

M.V.ராஜம்மா - அம்மா நடிகை

கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு மாடர்ன் தியேடர்ஸ் தயாரிப்பில் வெளியான “உத்தம புத்திரன்”  படதில் அறிமுகமாகி அதைதொடர்ந்து வெளியான “ கோகுல தாசி”, “ மதன காமராஜன்”, “குமாஸ்தாவின் பெண்” போன்றவற்றிலும்  பிரபல நடிகர் P.U.சின்னப்பா அவர்களுடன் இணைந்து நடிதார் M.V.ராஜம்மா.







அடுத்ததாக  நடிகர் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்த “ ஞான செளந்தரி”திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடந்ததை தொடர்ந்து " பாரிஜாதம்”, ”லைலா மஜனு” படங்களிலும் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்தார்.



பேறிஞர் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் உருவான “வேலைக்காரி” திரைப்படத்தில் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடிகை M.V. ராஜம்மா அவர்களின் நடிப்பு இன்றளவும் மறக்க முடியாது.

A. பீம் சிங் இயக்கத்தில் வெளியான “ பாகப்பிரிவினை” திரைப்படத்தில் மாற்றுத்திரனாளியாக நடித்த நடிகர் திலகம் சிவாஜியின் தாயாக நடித்து ரசிகர்களின் மனதை உருக வைத்தார்.

மக்கள் திலகம் MGR-வுடன் “ வேட்டைகாரன்” திரைப்படத்தில் இணைந்து நடிகை சாவித்திரியின் தாயாக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார் M.V. ராஜம்மா.



கர்ணன் திரைப்படத்தில்  குந்திதேவி கதாபாத்திரத்தில் தோன்றி தனது உன்னதமான நடிப்பால் மக்களை கலங்க செய்தவர் நடிகை M.V.ராஜம்மா.

கலைஞரி மு.கருணாநிதி யின் வசனத்தில் வெளியான “ தாயில்லா பிள்ளை” திரைப்படத்தில் தாய்வேடம் ஏற்று அழகு தமிழ் வசனங்களை அற்புதமாக பேசி நேர்த்தியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இவ்வாறாக நடிகை M.V.ராஜம்மா அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.