Monday, October 20, 2008

இயக்குனர் ஸ்ரீதர் மரணம்


பழம்பெரும் திரைப்படை இயக்குனர் ஸ்ரீதர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, உரிமைக் குரல், மீனவ நண்பன் உட்பட, காலத்தால் அழியாத பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த பெருமை அவருக்கு உண்டு.

காலஞ்சென்ற இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி பெயர் தேவசேனா. இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

Wednesday, October 8, 2008

அமரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அதை சட்டமாக்கும் வரைவில் அதிபர் புஷ் இன்று கையெழுத்திடுகிறார்.

இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன. இந்த மசோதா சட்டமாக வேண்டும் எனில், அதில் அதிபர் புஷ் கையெழுத்திட வேண்டும். அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான இந்த சட்ட வரையில், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.20 மணிக்கு அதிபர் புஷ் இன்று கையெழுத்திடுகிறார். அதன் பின்னர் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வரும் 10ம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

பிளாகர் ஸடாலின்..

அரசியல், அரசு திட்டங்கள், இளைஞர் முன்னேற்றம், கட்சி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த மக்களின் கேள்விகளுக்கு தனது பிளாக் மூலம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க உள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஸ்டாலின் தனது பெயரில் இணையதளம் மற்றும் பிளாக்கைத் http://mkstalin.net/blog/தொடங்கினார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்டாலின் தொடர்பான செய்திகள், படங்கள், அவரது அறிக்கைகள், கருத்துக்கள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்று வருகின்றன.
இதுதவிர பார்வையாளர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.

பிளாக் மூலம் ஸ்டாலின் தனது கருத்துக்களை கட்டுரையாக பதிவு செய்கிறார். உரையாடுகிறார். இந்த நிலையில், பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறி பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பணி நெருக்கடிக்கு நடுவில் பதிலளித்து வருகிறார் ஸ்டாலின். இந்த புதிய பகுதிக்கு கேள்விகளை பதிவு செய்யலாம்.
அரசியல், அரசு திட்டங்கள், இளைஞர் முன்னேற்றம், கட்சி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த மக்களின் கேள்விகளுக்கு பிளாக் மூலம் அவர் விரைவில் பதிலளிக்க உள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த பணிகளை அனைத்து தரப்பினருக்கும் விளக்குவதற்கான ஒரு களமாக கேள்வி-பதில் பகுதிகளை ஸ்டாலின் கருதுகிறார். இந்த பகுதி இன்று முதல் தொடங்கப்படுகிறது