Saturday, June 15, 2013

இரங்கல்: இயக்குனர் மணிவண்ணன்



பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். திரையுலகின் மீதுள்ள ஆர்வத்தால் இத்துறையில்
அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு
கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண்,
தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற  படத்தை இயக்கினார்.

கோவை மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜுடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில்  மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது.


இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் அவர்கள் இன்று (15-06-2013) திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment